விருதை செய்திகளை தெரிந்து கொள்ள உலக மக்களுக்கு இந்த தளம் ஒரு பாலம்

Sunday, October 12, 2014

விருத்தாசலம் மக்களே இதை படிங்க

விருத்தாசலம் மாவட்டம் ஆகுமா ஆகாத ?

(வரும் வராது போல ரொம்ப வருடமாக காலம் கடத்தி கொண்டு இருக்கிறார்கள் )

நமது விருத்தாசலம் மாவட்டம் ஆக வேண்டும் என்ற ஆசை நம்மில் அனைவருக்குமே அந்த 


ஆசை உண்டு... அதற்கான தகுதியும் நமது விருதை மாநகரத்துக்கு உண்டு அதற்கு மேலும் 

வலு சேர்ப்பது போல் நமது ஊரில் உள்ள அனைத்து சங்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளும் 

தனி தனியாக தீர்மானம் நிறைவேற்றியது அந்த செய்தி நாளிதழிலும் செய்தியாக வந்தது 

உதாரணமாக : மன்னிக்கவும் கடந்த ஒரு வருடமாக நாளிதழில் வந்த அரசியல்

கட்சிகள் மற்றும் சங்கங்கள் 
நிறைவேறிய தீர்மானம் மட்டுமே இங்கே பதிந்து உள்ளேன் )


மார்ச் 3 அன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி திட்டக்குடியில் நடந்த செயற்குழு கூட்டத்தில் 


விருத்தாசலத்தை மாவட்டம் ஆக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியது அந்த 

செய்தி தினகரனில் வந்தது 








Wednesday, July 30, 2014

மாநில அளவிலான கால்பந்துப் போட்டி: விருத்தாசலம் அணி சாம்பியன்


அரியலூரில் நடைபெற்ற மாநில அளவிலான கால்பந்தாட்டப் போட்டியில் விருத்தாசலம் அணி சாம்பியன் பட்டம் வென்றது.
இறுதி ஆட்டத்தில் விருத்தாசலம் அணியும். பெரம்பலூர் தனியார் பொறியியல் கல்லூரி அணியும் பலப்பரீட்சை நடத்தின. இரு அணிகளும் திறமையாக விளையாடியதால், ஆட்டத்தின் இறுதி வரை கோல் எதுவும் விழவில்லை. இதனையடுத்து டைபிரேக்கரில் விருத்தாசலம் வீரர்கள் நேர்த்தியாக விளையாடி 4 கோல்கள் அடித்து வெற்றி பெற்றனர். பெரம்பலூர் அணியால் ஒரு கோல் மட்டுமே அடிக்க முடிந்தது. அரியலூர் மாவட்ட கால்பந்தாட்டக் கழகம் சார்பில் நடைபெற்ற இந்தப் போட்டியில், சென்னை, திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட 16 அணிகள் பங்கேற்றன. மாவட்ட விளையாட்டரங்கில் கடந்த நான்கு நாட்களாக நடைபெற்ற இந்தப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுத் தொகையும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.


Friday, May 30, 2014

விருத்தாசலம் மீண்டும் திருமுதுகுன்றமாகுமா ?

இந்த பதிவை முழுவதும் படிக்கவும் மறக்காமல் உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும் உங்களுக்கு தெரியாத தகவல்களும் 
இந்த பதிவில் இருக்க வாய்ப்பு உள்ளது ஆகவே பதிவை முழுவதும் படிக்கவும் 



நம்பில் பலரும் விருத்தாசலம் என்ற சொல் தமிழ் சொல் என்று நினைத்து கொண்டு இருக்கிறோம் ஆனால் அது தவறு விருத்தாசலம் ஒரு வட மொழி சொல் ...என்னது விருத்தாசலம் தமிழ் இல்லையா போங்க பாஸ் போகி வேற வேலையை பாருங்க (உங்க மைன்ட் வாய்ஸ் நல்ல கேட்குது பாஸ் )..... விருத்தாசலம் தமிழ் சொல் அல்ல விருத்தாசலம் ஒரு வட மொழி சொல் விருத்தாச்சலம் பெயர்காரணம் : இது பெரும்பாலான நண்பர்களுக்கு தெரிந்து இருந்தாலும் தெரியாதவர்களுக்கு "விருத்த' என்றால் "முதுமை' என்றும் "அசலம்' என்றால் "மலை' என்றும் பொருள்படும். எனவே "விருத்தாசலம்' என்றால் "பழமலை' என்பது கருத்தாகிறது.தேவாரத்திருப்பதிகங்களில் அதே பொருளில் திருமுதுகுன்றம் என்று போற்றப்படுகின்றது.
இத்தலம் பழமலை என்று அழைக்கப்பட்டது. காலப்போக்கில் "விருத்தாசலம்' என வடமொழி சொல்லால் அழைக்கப்பட்டது. "விருத்தம்' என்றால் "பழமை'. "அசலம்' என்றால் "மலை'. காலத்தால் மிகவும் முற்பட்டது இந்த மலை

விருத்தாசலம் என்ற வட மொழி சொல்லை திருமுதுகுன்றம் மாற வேண்டும் என்று கடந்த முப்பது வருடங்களாக முயற்சி செய்து இருக்கிறார்கள் 

Wednesday, May 14, 2014

விருத்தாசலம் ஜங்ஷன் ரோடு வீடியோ பதிவு

விருத்தாசலம் ஜங்ஷன் ரோட்டில் கடுமையான போக்குவரத்து நெரிசல்

விருத்தாசலம் பஸ் ஸ்டாண்டில் இருந்து பாலக்கரை வெறும் இரண்டு கிலோ மீட்டர் தான் 

ஆனால் இந்த சாலையை கடப்பது அவ்வளவு எளிதானது அல்ல ...கடுமையான 

போக்குவரத்து நெரிசலால் .. சாதாரண நாட்களிலையே மாலை 

நேரத்தில் வாகனத்தில் இந்த இரண்டு கிலோ மீட்டர் கடக்க 

இருபது நிமிடம் ஆகிறது ,பண்டிகை நாள்களில் மேலும் வாகன நெரிசல் சொல்லவே 

தேவையில்லை அந்த கொடுமையை சொன்னால் பக்கம் பக்கமாக எழுதலாம் ஜங்ஷன் 

ரோடு மிகவும் குறுகிய சாலை அனைவரும் இது அறிந்ததே ,,,வாகனங்களை சரி வர 

பார்க் செய்யாத காரணம் மற்றும் மக்கள் சாலை விதிகளை சரி வரை கடைபுடிக்கத 

காரணத்தினாலும் மேலும் ஜங்ஷன் ரோடு போக்குவரத்து வரத்து நெரிசலில் ஸ்தம்பிகிறது

மன்னிக்கவும் இந்த வீடியோ ஜனவரி 2013 எடுத்தது ,,,இப்பொழுதும் இப்படி தான் உள்ளது


Sunday, April 27, 2014

விருதாச்சலத்தில் உள்ள பள்ளிகூடங்கள்


  • Fathima Matriculation
  • Saradha Vidyalaya
  • danish mission
  • Infant school
  • sakthi school
  • Halima matriculation school 
  • BVB school
  • Baby School
  • Sarasiwathi Vidyalaya
  • Govt Boys’ HSc School
  • Govt.Girls’ Hsc School
  • South Fort St Municipal Middle School                           

விருதாச்சலத்தில் உள்ள திருமண மண்டபவங்கள்

Marriage Halls


  • Balaji Thirumanamandapam
  • Gopal Parvathambal Thirumanamandapam
  • PARITHA Thirumanamandapam
  • Rajarasewari Thirumanamandapam
  • Ohm Sakthi Thirumanamandapam
  • Thirumuthukundram Thirumanamandapam
  • Rathinamahal Thirumanamandapam
  • Shanmugam mahalakshmi Thirumanamandapam
  • Arumugam Thirumanamandapam
  • Malaysia Thirumanamandapam
  • Anbu Thirumanamandapam
  • Deivam Thirumanamandapam
  • Siva Booja Poonvizha Thirumanamandapam
  • SVT Thirumanamandapam
  • G N Thirumanamandapam
  • Nadar Community Hall
  • ALC Community Hall 
  • NORJAHAN Thirumanamandapam
  • R.D.R.KALYANI THIRUMANAMANDAPAM 
  • THIRUMALAI THIRUCHANUR THIRUMANAMANDAPAM 

Saturday, April 26, 2014

விருதாச்சலத்தில் உள்ள தியேட்டர்கள்

விருத்தாசலம் நகரில் உள்ள தியேட்டர்கள்

1.சந்தோஷ் குமார் பேலஸ் SANTHOSH KUMAR PALACE(A/C)
ஜங்ஷன் ரோடு (பஸ் ஸ்டான்ட் எதிரில் )
விருத்தாசலம் 



2.பி,வி ,ஜி பேலஸ் P.V.G. PALACE (A/C)
பஸ் ஸ்டான்ட் பின்புறம் 
விருத்தாசலம் 



3.ஜெய் சாய் கிருஷ்ணா JAI SAI KRISHNA 
ஜங்ஷன் ரோடு 
விருத்தாசலம் 


Saturday, March 29, 2014

விருத்தாசலம் பஸ் ஸ்டாண்டில் ஒரு பெண்ணிடம்

விருத்தாசலம் பஸ்ஸ்டாண்டில் நின்றிருந்த ஒரு பெண்ணிடம்

ஒரு ஆண் நீங்கள் போட்டுருக்கும் perfume அதிக

வாசனையாக உள்ளது .perfume பெயர் சொல்ல முடியுமா ?

இல்ல என் தங்கைக்கு பிறந்தநாள் பரிசாக


வாங்கி கொடுப்பேன் அதற்கு தான் கேட்கிறேன் என்றான் ....

அந்த பெண் அமைதியாக சொன்னால் ......

''நீ அந்த perfume வாங்கி கொடுத்தால் உன்


தங்கைஇடமும் சில ஆண்கள் இப்படி கேட்பார்கள்

பரவாயில்லையா ''என்று.....!

----ஆப்பு கண்னுக்கு தெரியாது மாமு ....


நம்ம ஊர் பெண்ணுங்க எவ்வளவு தெளிவாக இருகாங்க ,ரொம்ப

பெருமையாக இருக்கு 





விருத்தாசலம் பேருந்து நிலையத்தில்

விருத்தாசலம் பேருந்து நிலையத்தில் ஓர் பெண் தன்னுடைய பையனுடன் பதற்றமாக

நின்று கொண்டிருந்தாள்.பக்கத்தில் உள்ளவர்கள் என்னவென்று கேட்டனர்.

"இவன் காசை முழுங்கிட்டான். என்ன செய்றதுன்னுதெரியலை'' ஆளாளுக்கு மருத்துவம் 

சொல்ல ஆரம்பித்தார்கள். ""நாலுவாழைப் பழத்தை ஊட்டிவிடு. தானா வெளியே வந்துடும்''

"ஆஸ்பத்திரிக்குப் போய் எக்ஸ்ரே எடுத்துப் பார்... '' கூட்டத்தில் நின்று கொண்டிருந்த ஒருவர்

பையனைத்தூக்கிக் குனிய வைத்து முதுகில் தட்டிக் கொடுத்தார். பையன் விழுங்கிய


காசுவெளியே வரவில்லை.அப்போது டிப்டாப்பாக உடையணிந்த ஒருவர் வந்தார்.பையனைத் 

தூக்கி,தலைகீழாகப் பிடித்துக் குலுக்கி,ஒருதட்டுத் தட்டினார்.காசு வெளியே வந்து விழுந்தது.

எல்லாரும் ஆச்சரியமாகப் பார்த்தார்கள்.அந்தப் பெண்நன்றியுடன் அவரைப்

பார்த்தாள்."சார் நீங்க டாக்டருங்களா?''"இல்லை இன்கம்டாக்ஸ் ஆபிஸர். எங்கே,

எப்படித்தட்டினால் காசு விழும்னு எனக்குத் தெரியாதா?






இதை படிங்க தல நானும் விருத்தாசலம் தான்

ஐரோப்பாவில் மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு ஒரு புதிய தலைவர் நியமிப்பதற்காக, ஒரு 

பெரிய வேலை வாய்ப்பு முகாம் ஏற்படுத்தினார் , அதில் 5000 பேர் கலந்து கொண்டனர்.

அதில் ஒருவர் நமது " ரியாஸ்"...

பில் கேட்ஸ்: அனைவருக்கும் வணக்கம், உங்களில் யாருக்கெல்லாம் ஜாவா மென்பொருள் 

(java) பற்றி தெரியுமோ அவர்கள் மட்டும் இருங்கள், மற்றவர்கள் வெளியே செல்லவும்..

2000 பேர் வெளியேறிவிட்டனர்.

ரியாஸ்: எனக்கு ஜாவா தெரியாது இருந்தாலும் பார்ப்போம்..

பில் கேட்ஸ் : இதுவரை 100 பேருக்கு மேல் நிர்வாகம் செய்த திறமை இருக்கிறதோ அவர்கள் 


மட்டும் இருக்கவும்,

2000 பேர் வெளியேறிவிட்டனர்.





Wednesday, March 12, 2014

விருத்தாசலம் இளைஞர்களே இதை படிங்க

கடந்த வாரம் சிதம்பரம் விருத்தாசலம் சாலையில் தோழர் ஒருவருக்கு 

ஏற்பட்ட விபத்தில்  அதிர்ஷவசமாக உயிர்தப்பியுள்ளார்.விபத்து நேர்ந்த

தற்கு காரணம் சாலையில் இருந்த மிகப்பெரிய பள்ளம் 
அரசாங்கத்தை

நம்பி நேரத்தை வீணடிக்காமல் அவரைப்போல் வேறு யாருக்கும் விபத்து

ஏற்படாமல் தடுக்க இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து

 "நமக்கு நாமே" திட்டத்தின் கீழ் அந்த சாலையை நேற்று சீரமைத்தனர் . 



Tuesday, March 11, 2014

விருதாச்சலத்தில் உள்ள பேங்க்

Banks

  • SBI                                                                  
  • IOB
  • ICICI
  • Indian Bank
  • Canara Bank
  • Axis bank
  • KarurViysa Bank
  • TAMIL NADU MERCANTILE BANK LTD 
  • City Union Bank Ltd
  • Co.op.Urban Bank
  • Lakshmi Vilas Bank
  • UCO BANK 
  • SOUTH ARCOT CO-OP CENTRAL BANK 
  • Kumbakonam Paraspara Nidhi Nilyam
  • கூட்டுறவு மத்திய வங்கி கிளை       

விருதாச்சலத்தில் உள்ள கல்லூரிகள்


 1 . Thiru Kolanjiappar Government 
      Arts College
      Address : cuddalore; 
      viruthachalam. 606001.
     Website:www.tkgacollege.com/
      Phone 260 243, 262 513

2 . Sri Thangam Periyasamy 
     College of Education 
     Address : pennadam
     vriddhachalam--606001.

3 . Sri Viruthambigai 
    College of Education 

Monday, March 10, 2014

கண்மணி குணசேகரின் எதார்த்தமான உரையடல்-வீடியோ பதிவு

 விருத்தாசலம்  மண்ணின் மைந்தர் கவிஞா் கண்மணி  

குணசேகர்அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் 


 வரலாற்றை பற்றி சிறப்பாக பேசியுள்ளீர்கள் 

அவர்கள் கேட்ட எல்லா கேள்விகளுக்கும்

 சிறப்பாகவும் செம்மையாகவும் பதில் தந்து உள்ளார் 

 மண்ணின் மைந்தர்க்கு வாய்ப்பு கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி


Wednesday, February 5, 2014

சன் டிவி வில் வந்த விருத்தாசலம் செய்தி

விருத்தாசலம் அருகே உள்ள கார்மாங்குடி கிராமத்தில் அரசு விதி மீறலை தாண்டி அள்ளபட்ட மணல் குவாரியை தற்காலிகமாக நிறுத்த விருத்தாசலம் R.D.O உத்தரவு விட்டுள்ளார்