விருதை செய்திகளை தெரிந்து கொள்ள உலக மக்களுக்கு இந்த தளம் ஒரு பாலம்

Sunday, October 12, 2014

விருத்தாசலம் மக்களே இதை படிங்க

விருத்தாசலம் மாவட்டம் ஆகுமா ஆகாத ?

(வரும் வராது போல ரொம்ப வருடமாக காலம் கடத்தி கொண்டு இருக்கிறார்கள் )

நமது விருத்தாசலம் மாவட்டம் ஆக வேண்டும் என்ற ஆசை நம்மில் அனைவருக்குமே அந்த 


ஆசை உண்டு... அதற்கான தகுதியும் நமது விருதை மாநகரத்துக்கு உண்டு அதற்கு மேலும் 

வலு சேர்ப்பது போல் நமது ஊரில் உள்ள அனைத்து சங்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளும் 

தனி தனியாக தீர்மானம் நிறைவேற்றியது அந்த செய்தி நாளிதழிலும் செய்தியாக வந்தது 

உதாரணமாக : மன்னிக்கவும் கடந்த ஒரு வருடமாக நாளிதழில் வந்த அரசியல்

கட்சிகள் மற்றும் சங்கங்கள் 
நிறைவேறிய தீர்மானம் மட்டுமே இங்கே பதிந்து உள்ளேன் )


மார்ச் 3 அன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி திட்டக்குடியில் நடந்த செயற்குழு கூட்டத்தில் 


விருத்தாசலத்தை மாவட்டம் ஆக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியது அந்த 

செய்தி தினகரனில் வந்தது 








ஏப்ரல் 16 திருமுதுகுன்றம் இசை சங்கத்தின் சிறப்பு செயற்குழு கூட்டத்திலும் தீர்மானம் நிறைவேற்ற பட்டு அந்த செய்தி தினகரன் நாளிதழில் வந்தது 



நிறைவேற்ற பட்டு அந்த செய்தி தினகரன் நாளிதழில் வந்தது

ஏப்ரல் 27 அன்று நடந்த ஒன்றிய குழு கூட்டதிலும் தீர்மானம் சேர்மன் முன்னிலையில் 


நிறைவேற்ற பட்டது அந்த செய்தி தினகரனில் வந்தது


மே8 அன்று நடத்த அனைத்து வர்த்தகர்கள் சங்கம் செயற்குழு கூட்டத்திலும் தீர்மானம் 


நிறைவேற்ற பட்டு அந்த செய்தி தினகரனில் வந்தது




அதே போல செப்டம்பர் 22தேதி அன்று நவாப் மஸ்ஜித்யில் உலமா சபை விருத்தச்சலத்தை 


மாவட்டம் ஆக்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றியது அந்த செய்தி நேற்றைய 


தினத்தந்தி நாளிதழில் வந்தது




மற்றும் செப்டம்பர் 23 அன்று ப ம க இளைஞர் அணி செயற்குழு கூட்டத்தில் 


விருத்தச்சலத்தை மாவட்டம் ஆக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றினார்கள்  

அந்த செய்தி தினகரன் நாளிதழில் வந்தது




அதே போல நான்கு மாதத்திற்கு முன்பே கேப்டன் டிவி யில் நம்து ஊர் தேமுதி க எம்எல்எ


முத்துகுமார் அவர்கள் அளித்த பேட்டியில் விருத்தச்சலத்தை மாவட்டம் ஆக்க வேண்டும் 

என்று பேட்டியில் வலியுறுத்தி இருந்தார்


மற்றும் வருவாய்த்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் விருத்தாசலம் தொகுதி 

எம்.எல்.ஏ. முத்துக்குமார் (தேமுதிக) பேசியதாவது: கடலூர் மாவட்டத்தை இரண்டாக 

பிரித்து, விருத்தாசலத்தை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டத்தை அறிவிக்க 

வேண்டும். 




அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம்: ஒரு மாவட்டத்தை உருவாக்க வேண்டும் 

என்றால் அதற்கென சில அளவுகோள் உள்ளன. குறைந்தபட்சம் 10 லட்சத்துக்கும்  

அதிகமான மக்கள் இருக்க வேண்டும். 2500 சதுர கி.மீ. பரப்பளவும், 2 வருவாய்  

கோட்டங்கள், 5 வருவாய் வட்டங்கள், 200 வருவாய் கிராமங்கள் இருக்க வேண்டும். இந்த  
அளவுகோள் எதுவும் விருத்தாசலத்தில் இல்லை.


அதை தொடர்ந்து நமது பேஸ்புக் பக்கத்திலும் நமது விருதை மாநகரத்தை மாவட்டம் ஆக 


விருப்பம் உள்ளவர்கள் உங்கள் பெயரை எழுதவும் என்று பொதுமக்கள் ஆதரவையும் 

பெற்றோம் 




(பார்க்காதவர்கள் கிழே உள்ள இணைப்பை கிளிக் செய்து பார்க்கவும்

https://www.facebook.com/photo.php?fbid=485934491493961&set=a.298134163607329.71607.100002322443054&type=3&src=https%3A%2F%2Ffbcdn-sphotos-e-a.akamaihd.net%2Fhphotos-ak-ash3%2F945937_485934491493961_872212606_n.jpg&size=960%2C720

தி மு க ,அ தி மு க காங்கிரஸ் கட்சிகளும் மாவட்டம் ஆக்க வேண்டும் 
இப்படி தனி 

தனியாக குரல் குடுப்பதை கூட அனைவரும் ஓன்று சேர்ந்து  இருந்தால் எப்போவே 

நமது  விருதை மாவட்டம் ஆகி இருக்கும் இப்படியே இருந்தால் கண்டிப்பா 2020 யில் கூட 

மாவட்டம் ஆகாது நமது விருதை மாவட்டம் என்ற அறிவிப்பு வரும் அந்த நாளை

எதிர்பார்த்து உங்களை 
போலவே நானும் காத்து (கனவு கண்டு) கொண்டு இருக்கிறேன்



புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்

No comments: