விருதை செய்திகளை தெரிந்து கொள்ள உலக மக்களுக்கு இந்த தளம் ஒரு பாலம்

Monday, February 2, 2015

விருத்தாசலம் தகவல்கள் மற்றும் பெயர் காரணம்

விருத்தாசலம் (ஆங்கிலம்:Vriddhachalam அல்லது Virudhachalam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கடலூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும்.
பெயர்க்காரணம்
"விருத்தம்"(=பழைய) மற்றும் "அசலம்"(=மலை) எனும் இரு வடமொழி சொற்களின் கூட்டே "விருத்தாசலம்" ஆகும். தமிழில் "திருமுதுகுன்றம்" எனவும் "பழமலை" என்றும் வழங்கப்படுகிறது.

திருமுதுகுன்றம் - தமிழ்ப்பெயர். விருத்தாசலம் என்பது சம்ஸ்கிரதப் பெயர். தற்போது வழக்கில் விருத்தாசலம் என்றே வழங்கப்படுகிறது.

இத்தலத்தின் பெயரில் 'குன்றம்' என்ற சொல் இருப்பினும், காண்பதற்கு மலை ஏதுமில்லை. குன்று பூமியினடியில் அழுந்தியிருப்பதாகத் தலவரலாறு கூறுகிறது. இதற்கேற்ப இப்பகுதியில் பூமிக்கடியில் பாறைகளே உள்ளன. எல்லாமலைகளும் தோன்றுவதற்கு முன்னரே இம்மலை தோன்றி மறைந்தமையால் இதற்குப் பழமலை - முதுகுன்றம் என்று பெயர் வந்தது. (விருத்தம் - பழமை, அசலம் - மலை) 



மக்கள் வகைப்பாடு

இந்திய இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 73,415 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். விருத்தாச்சலம் மக்களின் சராசரி கல்வியறிவு 77% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 83%, பெண்களின் கல்வியறிவு 70% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. விருத்தாச்சலம் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

புவியியல்
இந்நகரம் 11.50°N 79.33°E -ல் அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 45 மீட்டர் உயரத்தில் உள்ளது.


பள்ளிக்கூடங்கள்
அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி
அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளி
பாத்திமா மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளி
பேபி மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளி
சரசுவதி வித்யாலயா மேல்நிலைப் பள்ளி
டேனிசுமிசன் மேல்நிலைப் பள்ளி
கலைவாணி வித்யாலயா மேல்நிலைப் பள்ளி
சாரதா வித்யாலயா மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளி
வி.இ.டி. மேல்நிலைப் பள்ளி
பார்க்க வேண்டிய இடங்கள்
பழமலை நாதர்(விருத்தகிரிசுவரர்) ஆலயம் (பெரியகோயில் என வழங்கப்படுகிறது)
கொளஞ்சியப்பர் திருக்கோயில்
ஸ்ரீமுஷ்ணம் ஆதிவராக பெருமாள் ஆலயம்
பீங்கான் தொழிற்சாலை
முந்திரிப்பண்ணை
திரு கொளஞ்சியப்பர் அரசினர் கலைக்கல்லூரி
மத சம்பந்தமான விழாக்கள்
விருத்தகிரிஸ்வரர் கோயில் மாசிமகம்
விருத்தகிரிஸ்வரர் கோயில் மாசி மாத தேர்திருவிழா
புரட்டாசி மாத கருடசேவை
அரசியல்
விருத்தாசலம் தமிழ்நாடு சட்டமன்ற தொகுதிகளில் ஒன்றாகும். மக்களவைத் தொகுதிகளில் கடலூர் தொகுதியின் கீழ் வருகிறது. 2006ல் தேமுதிகவின் தலைவர் விஜயகாந்த் இங்கு வெற்றி பெற்று சட்டமன்றம் சென்றார். அந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தேமுதிக சார்பாக விஜயகாந்த் மட்டுமே வெற்றிபெற்றார்.
திரையரங்குகள்
சந்தோஷ்குமார் பேலஸ்
பி. வி. ஜி. பேலஸ்
ஜெய் சாய் கிருஷ்ணா பேலஸ்



ராஜேஸ்வரி தியேட்டர் (தற்போது இயக்கத்திலில்லை)
சுரேஷ் தியேட்டர் (தற்போது இயக்கத்திலில்லை)
சபிதா பேலஸ் (திருமண மண்டபமாக மாற்றப்பட்டுவிட்டது)

விருத்தகிரிசுவரர்

காசிக்கு வீசம் அதிகம் விருத்தகாசி என, ஆன்றோர்களால் போற்றப்படும், திருமுதுகுன்றம் என்ற கடலூர் மாவட்டம், விருத்தாசலம் மணிமுக்தாற்றின் கரையில், 1,500 ஆண்டுகளுக்கு முன், விபச்சித்து முனிவர் சிவபெருமானை பிரதிஷ்டை செய்து, திருப்பணியை துவங்கியது தான் விருத்தகிரீஸ்வரர் கோவில்.


சித்தர் காலத்திற்குப் பிறகு, கண்டராதித்தசோழன் மனைவி செம்பியன்மாதேவி, ராஜராஜசோழன் மனைவி ஏழிசைமோகனான, குலோத்துங்க சோழன், காடவராதித்தன், வையப்ப கிருஷ்ணநாயக்கர், கச்சிராயர், வீரசேகர செவ்வப்ப நாயக்கர், முத்து கிருஷ்ணப்ப நாயக்கர் ஆகியோர் திருப்பணிகளை செய்துள்ளனர் என்பது, இக்கோவிலின் பழமைக்கு சான்று.மணிமுக்தாற்றில் குளித்து, விருத்தகிரீஸ்வரரை வழிபட்டால், காசிக்குச் சென்று வந்த புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம். தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்தும், ஏராளமான பக்தர்கள், இக்கோவிலுக்கு வந்து, விருத்தகிரீஸ்வரரை வழிபட்டுச் செல்கின்றனர்.ஐந்து கோபுரங்கள், ஐந்து கொடிமரம், ஐந்து பிரகாரம், ஐந்து தேர் இக்கோவிலின் சிறப்பம்சங்கள்.

விருத்தாசலம் நகரம் 

விருத்தாசலம் நகரம் வேகமாக வளர்ந்து வரும் நகராகும். இங்கு மாவட்ட தலைநகருக்கு இணையாக ரெயில், சாலை போக்குவரத்து என அனைத்து வசதிகளும் அமைய பெற்றுள்ளது. 

எல்லா நகரங்களைப் போலவே விருத்தாசலமும் புறநகர் என்கிற பெயரில் தனது எல்லையை விரித்துக்கொண்டே  இருக்கிறது. வயலூர், மணவாளநல்லூர், சித்தலூர், பொன்னேரி, புதுக்கூரைப் பேட்டை போன்ற கிராமங்களை விழுங்கி ஒரு மிருகம் போல் இந்த நகரம் வளர்வதைப் பார்க்கும்போது பயமாகவும் இருக்கிறது. தங்கள் விளைநிலங்களை விற்று இந்த மக்கள் எல்.சி.டி. டி.வி-க்கள் வாங்குவதும், புதிய புதிய மோட்டார் பைக்குகள் வாங்குவதும், சாயங்காலத்தில் புறவழிச் சாலையோர மர நிழலில் மது அருந்துவதும் பரிதாபமாகத்தான் இருக்கிறது.
''வெளியூர்களுக்குச் சென்று திரும்பும்போது புறவழிச் சாலை வழியாகக் காட்சி அளிக்கும் விருத்தாசலத்தைப் பார்க்கும்போது 'நம் ஊர்’ என்கிற பாதுகாப்பு உணர்வு வந்துவிடுகிறது. தாலிச் செயினை அறுத்துக்கொண்டு ஓடும் திருடர்களும், பசியின் பொருட்டு பாலியல் தொழிலாளி ஆனவர்களும், பிச்சை எடுக்கும் முதியவர்களும், மேஜை துடைக்கும் சிறுவர்களும் நிறைந்து இருக்கும் இந்த நகரில்தான் முன்பொரு காலத்தில் சிவபெருமான் மலை வடிவத்தில் காட்சி அளித்தாராம்.
அப்புறம் ஒன்றை மறந்துவிட்டேன். எங்களுக்குச் சட்டமன்ற உறுப்பினராக விஜயகாந்த் ஐந்து ஆண்டுகள் இருந்ததையும் நினைவுகூர வேண்டி இருக்கிறது!''

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்

6 comments:

Edr citizen said...

மிக்க மகிழ்ச்சி...நானும் விருத்தாசலம் ஏரியா என்று சொல்லிக் கொள்ள....வாழ்த்துக்கள்!!

Unknown said...

நானும் விருத்தாசலம் தான் நண்பர்களே

Unknown said...

நானும் விருத்தாசலம் தான் நண்பர்களே

Packers and Movers Ahmedabad said...

Excellent post! I must thank you for this informative read. I hope you will post again soon.
Please Visit Our Webpage:
http://packersmoversahmedabad.co.in/

Unknown said...

Super thala

Vs said...

உண்மை பழமை ஆன நகரம் . காசி க்குக்கு வீசம் அதிகம். ஆனால் மணிமுத்தாறு நிலை என்ன குளிக்க முடியுமா? ஊர் எங்கு பார்த்தாலும் கோப்பை. கொசு மிக அதிகம் . மணிமுத்தாறு சுத்தமாகணும். நம்ம மக்களுக்கு காசி விட வேசம் அதிகமான நக ரம் காப் பாற்றபடனும்