விருதை செய்திகளை தெரிந்து கொள்ள உலக மக்களுக்கு இந்த தளம் ஒரு பாலம்

Friday, May 30, 2014

விருத்தாசலம் மீண்டும் திருமுதுகுன்றமாகுமா ?

இந்த பதிவை முழுவதும் படிக்கவும் மறக்காமல் உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும் உங்களுக்கு தெரியாத தகவல்களும் 
இந்த பதிவில் இருக்க வாய்ப்பு உள்ளது ஆகவே பதிவை முழுவதும் படிக்கவும் 



நம்பில் பலரும் விருத்தாசலம் என்ற சொல் தமிழ் சொல் என்று நினைத்து கொண்டு இருக்கிறோம் ஆனால் அது தவறு விருத்தாசலம் ஒரு வட மொழி சொல் ...என்னது விருத்தாசலம் தமிழ் இல்லையா போங்க பாஸ் போகி வேற வேலையை பாருங்க (உங்க மைன்ட் வாய்ஸ் நல்ல கேட்குது பாஸ் )..... விருத்தாசலம் தமிழ் சொல் அல்ல விருத்தாசலம் ஒரு வட மொழி சொல் விருத்தாச்சலம் பெயர்காரணம் : இது பெரும்பாலான நண்பர்களுக்கு தெரிந்து இருந்தாலும் தெரியாதவர்களுக்கு "விருத்த' என்றால் "முதுமை' என்றும் "அசலம்' என்றால் "மலை' என்றும் பொருள்படும். எனவே "விருத்தாசலம்' என்றால் "பழமலை' என்பது கருத்தாகிறது.தேவாரத்திருப்பதிகங்களில் அதே பொருளில் திருமுதுகுன்றம் என்று போற்றப்படுகின்றது.
இத்தலம் பழமலை என்று அழைக்கப்பட்டது. காலப்போக்கில் "விருத்தாசலம்' என வடமொழி சொல்லால் அழைக்கப்பட்டது. "விருத்தம்' என்றால் "பழமை'. "அசலம்' என்றால் "மலை'. காலத்தால் மிகவும் முற்பட்டது இந்த மலை

விருத்தாசலம் என்ற வட மொழி சொல்லை திருமுதுகுன்றம் மாற வேண்டும் என்று கடந்த முப்பது வருடங்களாக முயற்சி செய்து இருக்கிறார்கள் 


1986 ஆம் ஆண்டு விருத்தாசலம் நகர் மன்றத்தில் விருத்தாசலம் என்ற வடமொழி சொல்லை திருமுதுகுன்றம் என தமிழில் மாற்ற வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி அதை தமிழக அரசுக்கு அனுப்பி வைத்தனர்

1986 ஆம் ஆண்டு விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர் ஆர் ,டி .அரங்கநாதன் விருத்தாசலம் என்ற வட மொழி சொல்லை திருமுதுகுன்றம் என தமிழில் மாற்ற வேண்டும் என்று சட்டமன்றத்தில் கோரிக்கை வைத்தார்

1993 டிசம்பர் மாதம் 15 தேதி விருத்தாசலம் என்ற வட மொழி சொல்லை திருமுதுகுன்றம் என தமிழில் மாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி விடுதலை நாளேட்டில் தலையங்கம் வெளியானது

1996 ஆம் ஆண்டு விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர் குழந்தை தமிழரசன் அவரது தொடர் முயற்சியால் விருதச்சலத்தை திருமுதுகுன்றம் என மாற்றுவது என்று தீர்மானித்து 2000ஆம் ஆண்டு செப்டம்பர் 7ம் தேதி இந்திய அரசுக்கு தமிழக அரசு அனுப்பியது

பிறகு இது குறித்து திருமுதுகுன்றம் எழுத்தாளர்கள் கூட்டமைப்பு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் முலம் நடுவண் அரசிடம் கேட்ட போது ...பெயர் மற்றும் கூடுதல் தகவல்களை தமிழக அரசிடம் இதுவரை கிடைக்காததால் இக் கோரிக்கை ஆய்வில் இருப்பதாக பதில் அனுப்பி உள்ளார்கள்

மீண்டும் இக் கோரிக்கை சட்ட மன்றத்தில் அப்போதைய விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர் வேல் முருகன் நினைவு படுத்தினர்

இந்திய அரசிடமிருந்து கேட்கப்பட்ட கூடுதல் தகவல்கள் எவை அவற்றிற்கு தமிழக அரசு என்ன விடை கூரியது என தகவல் அறியும்
உரிமை சட்டத்தின் முலம் திருமுதுகுன்றம் எழுத்தாளர்கள் கூட்டமைப்பு கேட்டுள்ளது

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்

No comments: