விருத்தாசலம் நண்பர்கள்

விருதை செய்திகளை தெரிந்து கொள்ள உலக மக்களுக்கு இந்த தளம் ஒரு பாலம்

Monday, February 2, 2015

விருத்தாசலம் தகவல்கள் மற்றும் பெயர் காரணம்

விருத்தாசலம் (ஆங்கிலம்:Vriddhachalam அல்லது Virudhachalam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கடலூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும்.
பெயர்க்காரணம்
"விருத்தம்"(=பழைய) மற்றும் "அசலம்"(=மலை) எனும் இரு வடமொழி சொற்களின் கூட்டே "விருத்தாசலம்" ஆகும். தமிழில் "திருமுதுகுன்றம்" எனவும் "பழமலை" என்றும் வழங்கப்படுகிறது.

திருமுதுகுன்றம் - தமிழ்ப்பெயர். விருத்தாசலம் என்பது சம்ஸ்கிரதப் பெயர். தற்போது வழக்கில் விருத்தாசலம் என்றே வழங்கப்படுகிறது.

இத்தலத்தின் பெயரில் 'குன்றம்' என்ற சொல் இருப்பினும், காண்பதற்கு மலை ஏதுமில்லை. குன்று பூமியினடியில் அழுந்தியிருப்பதாகத் தலவரலாறு கூறுகிறது. இதற்கேற்ப இப்பகுதியில் பூமிக்கடியில் பாறைகளே உள்ளன. எல்லாமலைகளும் தோன்றுவதற்கு முன்னரே இம்மலை தோன்றி மறைந்தமையால் இதற்குப் பழமலை - முதுகுன்றம் என்று பெயர் வந்தது. (விருத்தம் - பழமை, அசலம் - மலை) 



மக்கள் வகைப்பாடு

இந்திய இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 73,415 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். விருத்தாச்சலம் மக்களின் சராசரி கல்வியறிவு 77% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 83%, பெண்களின் கல்வியறிவு 70% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. விருத்தாச்சலம் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

Sunday, October 12, 2014

விருத்தாசலம் மக்களே இதை படிங்க

விருத்தாசலம் மாவட்டம் ஆகுமா ஆகாத ?

(வரும் வராது போல ரொம்ப வருடமாக காலம் கடத்தி கொண்டு இருக்கிறார்கள் )

நமது விருத்தாசலம் மாவட்டம் ஆக வேண்டும் என்ற ஆசை நம்மில் அனைவருக்குமே அந்த 


ஆசை உண்டு... அதற்கான தகுதியும் நமது விருதை மாநகரத்துக்கு உண்டு அதற்கு மேலும் 

வலு சேர்ப்பது போல் நமது ஊரில் உள்ள அனைத்து சங்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளும் 

தனி தனியாக தீர்மானம் நிறைவேற்றியது அந்த செய்தி நாளிதழிலும் செய்தியாக வந்தது 

உதாரணமாக : மன்னிக்கவும் கடந்த ஒரு வருடமாக நாளிதழில் வந்த அரசியல்

கட்சிகள் மற்றும் சங்கங்கள் 
நிறைவேறிய தீர்மானம் மட்டுமே இங்கே பதிந்து உள்ளேன் )


மார்ச் 3 அன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி திட்டக்குடியில் நடந்த செயற்குழு கூட்டத்தில் 


விருத்தாசலத்தை மாவட்டம் ஆக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியது அந்த 

செய்தி தினகரனில் வந்தது 








Wednesday, July 30, 2014

மாநில அளவிலான கால்பந்துப் போட்டி: விருத்தாசலம் அணி சாம்பியன்


அரியலூரில் நடைபெற்ற மாநில அளவிலான கால்பந்தாட்டப் போட்டியில் விருத்தாசலம் அணி சாம்பியன் பட்டம் வென்றது.
இறுதி ஆட்டத்தில் விருத்தாசலம் அணியும். பெரம்பலூர் தனியார் பொறியியல் கல்லூரி அணியும் பலப்பரீட்சை நடத்தின. இரு அணிகளும் திறமையாக விளையாடியதால், ஆட்டத்தின் இறுதி வரை கோல் எதுவும் விழவில்லை. இதனையடுத்து டைபிரேக்கரில் விருத்தாசலம் வீரர்கள் நேர்த்தியாக விளையாடி 4 கோல்கள் அடித்து வெற்றி பெற்றனர். பெரம்பலூர் அணியால் ஒரு கோல் மட்டுமே அடிக்க முடிந்தது. அரியலூர் மாவட்ட கால்பந்தாட்டக் கழகம் சார்பில் நடைபெற்ற இந்தப் போட்டியில், சென்னை, திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட 16 அணிகள் பங்கேற்றன. மாவட்ட விளையாட்டரங்கில் கடந்த நான்கு நாட்களாக நடைபெற்ற இந்தப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுத் தொகையும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.


Friday, May 30, 2014

விருத்தாசலம் மீண்டும் திருமுதுகுன்றமாகுமா ?

இந்த பதிவை முழுவதும் படிக்கவும் மறக்காமல் உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும் உங்களுக்கு தெரியாத தகவல்களும் 
இந்த பதிவில் இருக்க வாய்ப்பு உள்ளது ஆகவே பதிவை முழுவதும் படிக்கவும் 



நம்பில் பலரும் விருத்தாசலம் என்ற சொல் தமிழ் சொல் என்று நினைத்து கொண்டு இருக்கிறோம் ஆனால் அது தவறு விருத்தாசலம் ஒரு வட மொழி சொல் ...என்னது விருத்தாசலம் தமிழ் இல்லையா போங்க பாஸ் போகி வேற வேலையை பாருங்க (உங்க மைன்ட் வாய்ஸ் நல்ல கேட்குது பாஸ் )..... விருத்தாசலம் தமிழ் சொல் அல்ல விருத்தாசலம் ஒரு வட மொழி சொல் விருத்தாச்சலம் பெயர்காரணம் : இது பெரும்பாலான நண்பர்களுக்கு தெரிந்து இருந்தாலும் தெரியாதவர்களுக்கு "விருத்த' என்றால் "முதுமை' என்றும் "அசலம்' என்றால் "மலை' என்றும் பொருள்படும். எனவே "விருத்தாசலம்' என்றால் "பழமலை' என்பது கருத்தாகிறது.தேவாரத்திருப்பதிகங்களில் அதே பொருளில் திருமுதுகுன்றம் என்று போற்றப்படுகின்றது.
இத்தலம் பழமலை என்று அழைக்கப்பட்டது. காலப்போக்கில் "விருத்தாசலம்' என வடமொழி சொல்லால் அழைக்கப்பட்டது. "விருத்தம்' என்றால் "பழமை'. "அசலம்' என்றால் "மலை'. காலத்தால் மிகவும் முற்பட்டது இந்த மலை

விருத்தாசலம் என்ற வட மொழி சொல்லை திருமுதுகுன்றம் மாற வேண்டும் என்று கடந்த முப்பது வருடங்களாக முயற்சி செய்து இருக்கிறார்கள்