விருதை செய்திகளை தெரிந்து கொள்ள உலக மக்களுக்கு இந்த தளம் ஒரு பாலம்

Monday, February 2, 2015

விருத்தாசலம் தகவல்கள் மற்றும் பெயர் காரணம்

விருத்தாசலம் (ஆங்கிலம்:Vriddhachalam அல்லது Virudhachalam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கடலூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும்.
பெயர்க்காரணம்
"விருத்தம்"(=பழைய) மற்றும் "அசலம்"(=மலை) எனும் இரு வடமொழி சொற்களின் கூட்டே "விருத்தாசலம்" ஆகும். தமிழில் "திருமுதுகுன்றம்" எனவும் "பழமலை" என்றும் வழங்கப்படுகிறது.

திருமுதுகுன்றம் - தமிழ்ப்பெயர். விருத்தாசலம் என்பது சம்ஸ்கிரதப் பெயர். தற்போது வழக்கில் விருத்தாசலம் என்றே வழங்கப்படுகிறது.

இத்தலத்தின் பெயரில் 'குன்றம்' என்ற சொல் இருப்பினும், காண்பதற்கு மலை ஏதுமில்லை. குன்று பூமியினடியில் அழுந்தியிருப்பதாகத் தலவரலாறு கூறுகிறது. இதற்கேற்ப இப்பகுதியில் பூமிக்கடியில் பாறைகளே உள்ளன. எல்லாமலைகளும் தோன்றுவதற்கு முன்னரே இம்மலை தோன்றி மறைந்தமையால் இதற்குப் பழமலை - முதுகுன்றம் என்று பெயர் வந்தது. (விருத்தம் - பழமை, அசலம் - மலை) 



மக்கள் வகைப்பாடு

இந்திய இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 73,415 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். விருத்தாச்சலம் மக்களின் சராசரி கல்வியறிவு 77% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 83%, பெண்களின் கல்வியறிவு 70% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. விருத்தாச்சலம் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.